×

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை, அக்.17: நாமகிரிப்பேட்ைட பேரூராட்சி பகுதிகளில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், 12 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகளை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதை மீறி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் மெயின்ரோடு, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், வாரசந்தை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ஓட்டல்கள், மளிகை கடை, பேக்கரி உள்ளிட்ட 60 கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மளிகை கடை, பேக்கரியில் இருந்து 12 கிலோ அளவில் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக்கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வில் செயல் அலுவலர் சதீஸ், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் பாலு உள்ளிட்டோர் ஈடுபட்டனர். பின்னர் செயல் அலுவலர் கூறுகையில், தொடர்ந்து இது போல் பிளாஸ்டிக் கவர் மற்றும் கேரி பேக்குகளை விற்பனை செய்தால், கடையின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்றார்.

Tags : Panchayat area ,
× RELATED சேகல், கொருக்கை ஊராட்சி பகுதியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட துவக்க விழா